திண்டுக்கல் மாவட்டத்தில் - குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த செயல் திட்டம் : ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் தகவல்

குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த மூன்று கட்ட செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்து வதற்கான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் வீ. ராமராஜ் பேசுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட, வட்டார, கிராம அளவில் என மொத்தம் 6 வகையான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும்.

இக்குழுக்களை வலுப்படுத்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மூன்று கட்ட செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 306 கிராமங்களில் குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயலாளர்களாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குழந்தை பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

இரண்டாவது கட்டமாக வட்டார அளவில் உள்ள குழுக்களின் உறுப்பினர்களுக்கும், மூன்றாவது கட்டமாக 1,500 ஆசிரியர்களுக்கும், பள்ளிகள் திறக்கப்பட்டதும் 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு குழந்தை பாதுகாப்பு உரிமைகள் குறித்த பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்