திருச்சி உறையூர் கோணக்கரை சாலையில் 100 அடி தொலைவுக்கு ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிநடைபெற்று வருகிறது.
திருச்சி உறையூர் கோணக்கரை சாலை அண்மையில் புதுப்பிக்கப்பட்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக திருச்சியில் மழை பெய்து வரும் நிலையில், இந்த சாலையில் குடமுருட்டி வாய்க்கால் கரையில் நேற்று முன்தினம் 100 அடி தொலைவுக்கு மண் சரிவு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் மண் சரிவை பார்வையிட்டு, சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
சவுக்குக் கட்டைகள் ஊன்றி, மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக அந்தச் சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கான்கிரீட் சுவர் கட்டுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago