திருவண்ணாமலை நகராட்சியில் - ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது : இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று முதல் பணிக்கு திரும்ப வுள்ளனர்.

திருவண்ணாமலை நகராட்சி யில் கடந்த 15 ஆண்டு காலமாக ஒப்பந்த அடிப்படையில் 250-க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில், 150 பேருக்கு மட்டும் வேலை வழங்கப்படும் என ஒப்பந்ததாரர் கூறியதாக புகார் எழுந்தது. இதனால், ஆத்திர மடைந்த தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று முன்தினம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதில், பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் கள் நகராட்சி தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு நகராட்சி நிர்வாகமே தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரமாக்கி வேலை வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக தொடர்ந்து நகராட்சியில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று முதல் அவர்கள் பணிக்கு திரும்ப வுள்ளனர்.

இது தொடர்பாக திருவண்ணா மலை நகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘இந்தப் பிரச்சினையில் நகராட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை. தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் ஏற்கெனவே முடிந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தமும் கடந்த 14-ம் தேதி யுடன் முடிந்துவிட்டது. எனவே, புதிய ஒப்பந்தம் தொடர்பான அனுமதிக்காக நகராட்சி களின் நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதுவரை அனைவருக்கும் பணி கொடுத்து சம்பளம் கொடுக்க முடியாது என்பதால் 150 பேருக்கு மட்டும் பணி வழங்கலாம் என கூறப்பட்டது. இதில், ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில் இருந்து சமூக தீர்வு காணப்பட்டது. அதன்படி, 250 பேருக்கும் சுழற்சி முறையில் பணி வழங்கப்படும் என்றும் சுழற்சி முறையில் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு சம்பளம் வழங்கப்படும்.

ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை

புதிய ஒப்பந்தம் வந்ததும் அனைவருக்கும் வழக்கம்போல் வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதற்கு, ஒப்புக்கொண்ட வர்கள் பணிக்கு திரும்பவுள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்கள் அனை வருக்கும் இ.எஸ்.ஐ., பி.எப் பிடித்தம் செய்வதுடன் ஒவ்வொரு தூய்மைப் பணியாளர் பெயரில் ரூ.5 லட்சத்துக்கு காப்பீட்டு தொகை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்