பள்ளிகள் திறக்கப்பட்டால் செய்ய வேண்டியது என்ன? : அனைத்து துறை அலுவலர்களுக்கு கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், அடுத்த மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

அப்படி பள்ளிகள் திறக்கப் பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கி ணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித் ததாவது: பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை தலைமையாசிரியர்கள், முதல்வர் கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மாணவர்கள் பள்ளியில் நுழையும்போது `தெர்மல்ஸ்கேனர் ’மூலம் உடல் வெப்பநிலை கண்டறிந்து தனிப்பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும். கூடுதல் ஆட்சியர் பள்ளி வளாகம். வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு பயன்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும். இப்பணிகளை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டப்பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்திட வேண்டும். மேலும் நகராட்சி ஆணையர்கள், சுகாதாரப் பணி யாளர்களை கொண்டு பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகம், வகுப்பறைகள், விடுதிகள் ஆகியவற்றை காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். மண்டல போக்குவரத்து அலுவலர்கள், மாணவர்கள் குறிப்பிட நேரத்துக்கு பள்ளி செல்வதற்கு பேருந்து வசதிகளை செய்த தர வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார். அனைத்து பள்ளிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பெயர், அதில் பணியாற்றும் மருத்துவர் பெயர், கைப்பேசி எண் போன்றவற்றை குறிப் பிட வேண்டும். பள்ளி நடை பெறும்போது மருத்துவ முகாம் அமைத்து மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும்.

மாணவ, மாணவிகள் குடிநீரை வீட்டில் இருந்தே எடுத்து வரவேண்டும். குடி நீர், உணவு போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. கை குலுக்குதல், தொட்டு பேசுதல் தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, பல்வேறுதுறை அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்