திருப்பத்தூரில் 6 ஆண்டுகளாக போராடிய பெண்ணுக்கு 16 நாளில் ரேஷன் கார்டு :

திருப்பத்தூர் சீதளிகீழ்கரையைச் சேர்ந்தவர் சகுபர்நிஷா. இவர் ரேஷன் கார்டு கேட்டு 6 ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுத்து வந்தார். பல்வேறு காரணங்களால் அவருக்கு ரேஷன் கார்டு கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனு அனுப்பினார். இதையடுத்து 16 நாட்களில் அவருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 6,198 மனுக்கள் பெறப்பட்டு 3,414 மனுக்கள் தீர்க்கப்பட்டன. இதில் வருவாய்த் துறை மூலம் 222 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 337 பேருக்கு முதியோர் உதவித் தொகை ஆணை, 26 பேருக்கு இதர நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை மூலம் 390 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது:

மொத்தம் 3,414 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத 740 மனுக்கள் மீது அதிகாரிகள் கள ஆய்வு செய்து, மனுதாரர்களை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளனர். முகவரியின்றி விண்ணப்பித்த 2,044 மனுக்கள் நிராகரிக்கப் பட்டன. அவர்களும் உரிய ஆவ ணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE