திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாழை ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி முன்னிலையில் ஏலம் நடை பெற்றது. இதில், 11 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் அதிக பட்சமாக ஒரு வாழைத்தார் ரூ.470-க்கு ஏலம் போனது. 1,954 வாழைத் தார்கள் ரூ.1,61,525-க்கு ஏலம் விடப்பட்டு, விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago