நெல்லையில் - 2,069, தென்காசியில் - 2,284 - உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் : அதிகாரிகளுடன் மாநில ஆணையர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி , திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பேசியதாவது:

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடுநிலையுடனும், பாதுகாப்பு டனும் நடைபெற வேண்டும். அலுவலர்களாகிய நாம் அனை வரும் தேர்தல் குறித்த அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்தல், தேர்தல் கண்காணிப்பு பணிகள், தேர்தல் நன்னடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் உள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்து கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் இடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் நேரடித் தேர்தல் நடைபெறவுள்ள பதவியிடங்கள்:

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்- 12, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்- 122, கிராம ஊராட்சி தலைவர்கள்- 204, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்- 1,731. மொத்தம்- 2,069.

மறைமுக தேர்தல் நடைபெற வுள்ள பதவியிடங்கள்: மாவட்ட ஊராட்சி தலைவர்- 1, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்- 1, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்- 9, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்- 9, கிராம ஊராட்சி துணைத் தலைவர்- 204. மொத்தம்- 224.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்புடைய 769 சட்டப்பேரவைத் தொகுதி பாகங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு, கிராம ஊராட்சி வார்டு வாரியாக 1,731 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும் 6,73,986 வாக்காளர்கள் கண்டறியப் பட்டுள்ளனர். இதில் ஆண்கள்- 3,30,543, பெண்கள்- 3,43,387, மூன்றாம் பாலினத்தவர்- 56. திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்- 14, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்- 144, கிராம ஊராட்சி தலைவர்கள்- 221. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்- 1,905. மொத்தம்- 2,284.

மறைமுக தேர்தல் நடைபெற வுள்ள பதவியிடங்கள்: மாவட்ட ஊராட்சி தலைவர்- 1, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்- 1, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்- 10, துணைத் தலைவர்- 10, கிராம ஊராட்சி துணைத் தலைவர்- 221. மொத்தம்- 243.

மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள்- 3,69,442, பெண் வாக்காளர்கள்- 3,85,922, மூன்றாம் பாலினத்தவர்- 49, மொத்த வாக்காளர்கள்- 7,55,413.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட எஸ்பிக்கள் என்.மணிவண்ணன் (திருநெல்வேலி), கிருஷ்ணராஜ் (தென்காசி), மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அலுவலர்கள் க.அருண்மணி (ஊராட்சிகள்), கு.தனலட்சுமி (நகராட்சிகள்), உதவி ஆணையர் சம்பத் (தேர்தல்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்