ஆட்டோ தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தை மீண்டும் அமைக்க வலியுறுத்தி, திருநெல் வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டோ சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் மோகன் தொடங்கி வைத்தார்.
`கடந்த திமுக ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கான தனிநல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும். கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்து விலையைக் குறைக்க வேண்டும். மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது’ என வலியுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago