பாளை. மார்க்கெட் - வியாபாரிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு :

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொடங்கிய காலவரையற்ற கடையடைப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் ஏ.ஜே.எம்.சாலமோன், பொதுச்செயலாளர் கே.பெரியபெருமாள், பொருளா ளர் டி.இசக்கி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, கடந்த 12-ம் தேதி மாநகராட்சி ஆணையர் தலைமை யில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி அருகில் காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான பழைய காவலர் குடியிருப்பு வளாகம் மற்றும் ஜவஹர் மைதானம் ஆகிய இடங்களில் மாற்று கடைகள் அமைத்து தருவதாகவும், புதிய கட்டுமான பணிகள் முடிவடைந்தபின் தற்போது வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு கடை வழங்கவும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, தற்காலிக கடைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், இந்த இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்க இந்து அமைப்புகளும், வேன் ஓட்டுநர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், மாற்று இடத்தில் தற்காலிக கடைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் தற்காலிக கடைகளை அமைக்க வலியுறுத்தி, காலவரையற்ற கடையடைப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினோம். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார். தற்காலிக கடைகள் அமைப்பது தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாபும் இந்த விவகாரத்தில் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனார்.

வியாபாரிகள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து மார்க்கெட்டில் கடைகள் நேற்று வழக்கம்போல் செயல்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE