ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர் தற்கொலை? : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே நன்னகரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் ராதாகிருஷ்ணன் (48). பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். குடும்பத்துடன் முக்கூடலில் தங்கியிருந்தார். ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் பணிக்கு சென்ற அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். இது தொடர்பாக, முக்கூடல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பணிச் சுமை காரணமாக கடந்த சில நாட்களாக ராதாகிருஷ்ணன் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உடலை வாங்க மறுத்து அவரது உறவினர் கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிச்சுமையால் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துள்ளார். அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை க்குப்பின் ராதாகிருஷ்ணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்