ரூ.8.75 கோடி வரிஏய்ப்பு புகாரில் விசாரிக்கப்பட்ட தொழிலதிபர் தப்பியோட்டம் :

திருநெல்வேலியில் ரூ.8.75 கோடி வரிஏய்ப்பு புகாரில் விசாரிக்க ப்பட்ட தொழில திபர் பெரியராஜா (40) தப்பியோடி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள அரியகுளத்தை சேர்ந்தவர் பெரியராஜா. கேடிசி நகரில் வசித்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்து, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை அவர் செலுத்தாமல் முறைகேடு செய்திருப்பதாக அவர் மீது புகார்கள் வந்தன. இதையடுத்து, வணிகவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது அலுவலகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ரூ.8.75 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்தது தெரியவந்தது. அவரிடம் வணிகவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

`தனக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதாகவும், மயக்கம் வருவதாகவும்’ பெரிய ராஜா கூறியதை அடுத்து, திருநெல் வேலி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவில் அவர் அனுமதிக்கப்பட்டார். வணிவரித் துறை ஊழியர்கள் அவரைக் கண் காணித்து வந்தனர். நேற்று காலையில் கழிவறைக்குச் சென்ற ராஜா தப்பியோடிவிட்டார். இதுகுறித்து,, ஹைகிரவுண்ட் போலீஸாருக்கு வணிகவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அவரைத் தேடி வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்