பணியில் இருந்து நீக்கியதை கண்டித்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நலச் சங்க தலைவர் மலர்வண்ணன் தலைமையில் நடைபெற்ற தர்ணாவில் தூய்மை பணியாளர்கள் பலரும் பங்கேற் றனர். பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தலைவர் மலர்வண்ணன் கூறும்போது, “திருவண் ணாமலை நகராட்சியில் தனியார் நிறுவன மேற்பார்வையில் துப்புரவு பணி நடைபெற்றது. 287 தூய்மை தொழிலாளர்கள் பணி செய்து வந்தனர். தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யும் வரை, நகராட்சியின் மேற்பார்வையில் துப்புரவுப் பணி மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், திருவண் ணாமலை நகராட்சியில் துப்புரவுப் பணியை மேற்கொள்ள 150 தூய்மை தொழிலாளர்கள் போது மானது என தனியார் நிறுவன நிர்வாகிகள் மூலம் இன்று (நேற்று) தகவல் தெரிவிக்கப்பட்டது. 150 தொழிலாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, மாதத்துக்கு 15 நாட்களுக்கு மட்டுமே பணி என அறிவிக்கப்பட்டது. பணியில் உள்ள நபர்கள் யார்? என்ற பட்டியலை வெளியிடவில்லை. ஒரு தொழிலாளிக்கு 15 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும். 137 பேர் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு தினக்கூலியாக ரூ.310 வழங்கப்பட்டது. அந்த தொகையில் இருந்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது தொழிலாளர் வைப்பு நிதி, இஎஸ்ஐ ஆகியவற்றுக்கு பிடித்தம் செய்யப் பட்டது. ஆனால், தொழிலாளர் வைப்பு நிதியின் கணக்கு என் வழங்கப்படவில்லை. ஒப்பந்த காலம் முடியும்போது தெரிவிக் கப்படும் என்றனர். ஒப்பந்தம் முடிந்துவிட்டது. தொழிலாளர் வைப்பு நிதியின் நிலை என்ன? என தெரியவில்லை. தற்போது, வேலை யும் கிடையாது என்கின்றனர்.
எனவே, தனியார் நிறுவனத் துடன் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளாமல், நகராட்சியின் நேரடி கண்காணிப்பில் பணி வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப் பட்ட தொழிலாளர் வைப்பு நிதியை பெற்றுத்தர வேண்டும். திருவண்ணாமலை நகராட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் இரண்டு சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர் களுக்கு மட்டும் பணி வழங்கப் படுகிறது. அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டும்போது, பணியில் இருந்து நீக்குகின்றனர். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
அனைவருக்கும் தடையின்றி பணி வழங்க வேண்டும் என நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டோம். எங்களுடன் நகராட்சி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப் படவில்லை. எங்களுக்கு ஆதரவாக முன்னாள் கவுன்சிலர் ரவி, நகராட்சி ஆணையாளருடன் செல்போன் மூலமாக பேச்சுவார்த்தை நடத் தினார்.
அப்போது அவர், இதற்கு விரைவில் தீர்வு காண நட வடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்கிறோம். எங்களுக்கு தடையின்றி பணி வழங்க தவறினால், நாளை(இன்று) முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடத் தப்படும்” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago