வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை - தடை செய்யப்பட்ட 40 கிலோ மீன்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட சுமார் 40 கிலோ மீனை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நேற்று காலை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது, பொதுமக்களுக்கு தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் தடைசெய்யப்பட்ட மீன்கள் ஏதாவது விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, விற்பனைக்கு தடை செய்யப்பட்ட அணை மீன்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 40 கிலோ எடையுள்ள அணை மீன்களை பறிமுதல் செய் தனர். மற்றொரு கடையில் 2 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர், இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்ததுடன், மீன் மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், தரமான மீன்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்