ஆணையாளர் பணியிடம் காலியாக உள்ளதால் - ஆம்பூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

By ந. சரவணன்

ஆம்பூர் நகராட்சியில் ஆணை யாளர் பணியிடம் காலியாக உள்ளதால் வளர்ச்சி பணிகள் மேற் கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என மொத்தம் 4 நகராட்சிகள் உள்ளன. இதில், ஆம்பூர் நகராட்சி 36 வார்டு களை கொண்டது.

ஆம்பூர் நகராட்சி ஆணையா ளராக பணியாற்றி வந்த சவுந்திர ராஜன் கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் பெற்றுச்சென்றார். இதைத் தொடர்ந்து, சிதம்பரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த அஜீதாபர்வீன் ஆம்பூர் நகராட்சி ஆணையாளராக பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.

ஆனால், பல்வேறு காரணங் களாக அஜீதா பர்வீன் ஆம்பூர் நகராட்சி ஆணையாளராக பணி ஏற்க முன்வரவில்லை. இதனால், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் பணியிடம் கடந்த 1 மாதமாக காலி யாகவே உள்ளது.

நகராட்சி ஆணையாளர் பணி யிடம் காலியாக உள்ளதால் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப் பட்டு வந்த வளர்ச்சிப்பணிகள் மற்றும் அலுவலகப்பணிகள் தேக்கமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்த ஊழியர் களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ‘‘ஆம்பூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் மேற் கொள்ளப்படுகிறது. இது தவிர கட்டிட வரைப்பட அனுமதி வழங்கல், புதிய வீட்டுக்கான வரி விதிப்பு, பொது சுகாதாரப் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் நகராட்சி ஆணையாளர் மேற்பார்வையில் அலுவலக ஊழியர்கள் மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலை யில், கடந்த ஒரு மாதமாக ஆணை யாளர் பணியிடம் காலியாக உள்ளதால் நகராட்சி சார்பில் மேற் கொள்ளப்பட்டு வந்த பல பணிகள் தேக்கமடைந்துள்ளன.

தூய்மைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தூய்மைப்பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்கவில்லை என்பதால் பல வார்டுகளில் தூய்மைப்பணிகள் பாதிக்கப்பட்டு சுகாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

இது மட்டுமின்றி நகராட்சி அலுவலகப்பணிகளும் கடந்த ஒரு மாதமாக சரிவர நடை பெறவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ஆம்பூர் நகராட்சிக்கு புதிய ஆணையாளரை நியமித்து வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது’’ என்றனர்.

இதுதொடர்பாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் குபேந்திரன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) தான் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு வளர்ச்சிப்பணிகள் பாதிப்படை யாமல் இருக்க நகராட்சி பொறி யாளாராக அங்கு பணியாற்றி வரும் ராஜேந்திரன் என்பவரை நகராட்சி ஆணையாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

காசோலையில் கையெழுத் திடும் அதிகாரம் அவருக்கு வழங் கப்பட்டுள்ளதால் வளர்ச்சிப் பணி களுக்கு தேவையான காசோலையை அவர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க விரைவில் ஆம்பூர் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்