மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவால் - வெறிச்சோடிய பொய்கை கால்நடை சந்தை :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அச்சம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவு காரணமாக பொய்கை கால்நடை சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பொய்கை கிராமத்தில் நடைபெறும் கால்நடை சந்தையை பொதுமக்கள் நலன் கருதி ஒரு வாரத்துக்கு மூட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி, செவ் வாய்க்கிழமையான நேற்றும் (17-ம் தேதி) கால்நடை சந்தை செயல்படவும் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்வோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத் தின் கீழ் தக்க தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பொய்கை கால்நடை சந்தைக்கு சில வியாபாரிகள் கால்நடைகளை விற் பனைக்காக கொண்டுவந்தனர். சந்தை நடைபெறும் இடம் மூடப் பட்டிருந்ததால் அங்கிருந்து சற்று தொலைவில் நெடுஞ்சாலையை யொட்டி உள்ள இடத்தில் சிலர் மாடுகளை விற்பனை செய்ய முயன்றனர். இந்த தகவலறிந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விரைந்து சென்று வியாபாரிகளை எச்சரித்து விரட்டி அனுப்பினர். காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் பொய்கை சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்