திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை மற்றும் பதிவேடு துறையின் நில அளவை வேளாண் மையத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து நில அளவை, பதிவேடு துறை நில அளவை வேளாண் அலுவ லகத்தை திறந்து வைத்து பேசும்போது, "திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக தொடங் கப்பட்டுள்ள நில அளவை மற்றும் பதிவேடு துறையின் நில அளவை வேளாண் மையம் மூலம் ஊரக பகுதிகளில் நிலப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும். அதேபோல், நகர்பகுதிகள் கணினிமயமாக்குதல் பணியும், புல அளவு வரைப்படங்களை மின்னணு மயமாக்குதல் பணிகள், நத்தம் நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கு தல் உள்ளிட்ட பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும்.
இந்த அலுவலகம் மூலம் திருப் பத்தூர் வட்டத்தில் ஒரு நகர் பகுதி, 69 வருவாய் கிராமங்கள் மற்றும் நாட்றாம்பள்ளி வட்டத்தில் உள்ள 30 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
மேலும், மென்பொருள் மூலம் புல வரைப்படங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அவர வருக்கு சொந்தமான நிலங்களின் புல வரைபடங்கள் மற்றும் சிட்டா-பட்டா போன்ற தகவல்களை எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், நில அளவைத்துறை உதவி இயக்குநர் சேகரன், கோட்ட ஆய்வாளர் அந்தோனிதாஸ், நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் மகாலட்சுமி, வட்ட துணை ஆய்வாளர்கள் ரவி, சீனி வாசன், வட்ட சார் ஆய்வாளர் பனிமலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட நில அளவை மற்றும் பதிவேடு துறையின் நில அளவை வேளாண் மைய அலுவலகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் குத்துவிளக்கேற்றி நேற்று திறந்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago