சேத்தியாத்தோப்பு அருகே - எறும்பூர் பெரிய ஏரி தூர் வாரப்படுமா? :

By செய்திப்பிரிவு

சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியை தூர் வார வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இதன் கரைகளில் பனைமரங்கள் அதிகளில் இருப்பதால் பனைசாலை ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியானது பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதில் 7 அடி முதல் 10 அடி வரை தண்ணீர் தேக்க முடியும். இதன் மூலம் 200 ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. ஏரிக்கு 3 பாசன மதகுகள் இருந்தும் அதில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்," பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஏரி தூர்ந்து போய் உள்ளது. ஆக்கிரமிப்புகளும் உள்ளன. சுமார் 3.5 மீட்டர் ஆழமுள்ள ஏரியில் இரண்டடி கூட தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. ஏரியை துரித கதியில் தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன மதகுகளை சீரமைக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்