சங்கராபுரத்தை அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேலாண் மைக் குழு உறுப்பினரான க.திருப் பதி அப்பகுதி மக்களிடம், கிராமப் பள்ளியின் மாணவர்களுக்கு சிறந்த கல்வி கொடுக்கவும், அதற்கு உறுதுணையாகவும் கிராம மக்கள் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் பேரில் கிராம மக்கள் தாமாக முன்வந்து அளித்த தொகையில், பள்ளிக்கு சீர் வரிசையாக இரு பீரோக்கள், 3 மேஜைகள், 3 தொலைக் காட்சிகள், 8 நாற்காலிகள் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு எழுது பொருட்கள் என ரூ. ஒரு லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வாங்கப்பட்டன.
இந்த சீர் வரிசை வழங்கும் விழா நேற்று முன் தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கு.ராஜா தலைமை தாங்கினார். பள்ளித் தலமையாசிரியர் கு.கந்தசாமி வரவேற்றார். கிராம மக்களும் பள்ளி மேலாண்மைக் குழுவினரும் சீர் வரிசைப் பொருட்களுடன் மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்று பொருட்களை வழங்கினர்.
அப்போது பள்ளியின் இருபால் ஆசிரியர்களும் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ. 40,000 வழங்கினர். எஸ்.வி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பு தலைமை ஆசிரியர் மோ. கலாபன் ரூ. 2,500 வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிகளை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் க.திருப்பதி தொகுத்து வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago