வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து - காளையார்கோவிலில் 43 ஊராட்சித் தலைவர்கள் தர்ணா :

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டார வளர்ச்சி அலு வலர்களைக் கண்டித்து ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலை வர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் சிமென்ட் சாலை, சுற்றுச்சுவர், பாலம் கட்டுமானப் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

கடந்த காலங்களில் நூறு நாள் வேலைத் திட்டப் பணிகள் ஊராட்சித் தலைவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் மூலம் மேற் கொள்ளப்படும் பணிகளை, ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்த தாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து தங்களுக்குத்தான் பணி ஆணை வழங்க வேண்டுமெனக்கோரி, காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் 43 ஊராட்சித் தலைவர்களும் நேற்று திரண்டனர்.

ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சத்யன் வரவில்லை. ஊராட்சித் தலைவர்களை போலீஸ் மூலம் வெளியேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆணையர்) பாஸ்கரன் நடவடிக்கை எடுத்தார்.

இதனால் ஊராட்சித் தலை வர்கள் ஒன்றிய அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் யாரையும் அலுவலகத் துக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களிடம் பிடிஓக்கள், இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பணி ஆணை களை வழங்கியதும் ஊராட்சித் தலைவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்