நெல்லையப்பர் கோயிலில் ரூ.13 லட்சம் காணிக்கை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இக்கோயிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்களைத் திறந்து காணிக்கை எண்ணும் பணி கடந்த 16.2.2021-ம் தேதி நடைபெற்றது. அப்போது ரூ.17,71,256 ரொக்கம் காணிக்கையாக கிடைத்தது. நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை நாகர்கோவில் உதவி ஆணையர் து.ரத்தினவேல் பாண்டியன், ஆய்வர்கள் தனலெட்சுமி வள்ளி, முருகன் ஆகியோர் பங்கேற்றனர். 21 உண்டியல்களில் இருந்து ரூ.12,93,256 ரொக்கம், 68.32 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்கள், 223.40கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும் வெளிநாட்டுப் பணத்தாள் ஒன்றும் கிடைத்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்