திருநெல்வேலியில் எம்.பி.பி.எஸ்.மற்றும் சித்த மருத்துவக் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.
கடந்த திங்கள்கிழமை முதல் கலைக்கல்லூரிகளில் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. தற்போது கரோனா 2-வது அலை குறைந்துள்ள நிலையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவம் மற்றும்சித்த மருத்துவக் கல்லூரிகளில் 2 முதல் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியர் நேற்று வருகை தந்தனர். அவர்களிடம் இரு தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விடுதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டது. கரோனா பரிசோதனை முடிவுகளின்படி தொற்று இல்லாத மாணவ, மாணவியர் வகுப்புகளுக்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக ஆசிரியர்கள் இன்று வகுப்புகளை நடத்தவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago