தி.மலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை - முகக்கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் : காவல், வருவாய் துறையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் நேற்று பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்த 200 பேரிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டார பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால், இந்த பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவலை அதிகரிப்பதற்கு முகக்கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதுதான் காரணம் என சுகாதாரத் துறையினர் தெரிவித் துள்ளனர். இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சி களில் அதிரடி தணிக்கை நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு, அவலூர்பேட்டை சாலை ரயில்வே ‘கேட்', ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம், செங்கம் சாலை, ஏந்தல் கூட்டுச்சாலை சந்திப்பு, தேரடி வீதி, கிரிவலப் பாதை என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து தணிக்கையில் ஈடு பட்டனர். மேலும், கடைகளும் கண்காணிக்கப்பட்டன.

இரு சக்கர வாகனத்தில் சென்ற வர்கள், பேருந்தில் பயணித்த பயணிகள், ஆட்டோவில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்ற வர்கள் என முகக்கவசம் அணியாமல் சென்ற 200-க்கும் மேற்பட்டவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும், ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே மனு எழுதும் இடத்தில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தை எச்சரித்து, சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்குமாறு அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்