வேலூர், திருவண்ணாமலையில் அகவிலைப் படியை வழங்கக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் சரவணராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், பங்கேற்றவர்கள் தமிழக அரசு ஊழியர்களுக்கு அக விலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
அதேபோல், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற் றது. மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ரவி, பொரு ளாளர் ஞானசேகரன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை, தமிழக அரசு முடக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தமிழக அரசு அகவிலைப்படி முடக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்க மிட்டனர்.
திருவண்ணாமலை
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்ப தாகவும், தேர்தல் கால வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வட்ட கிளை செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித் தார். கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், “ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை பொருளாளர் பாபு தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க வட்ட கிளை செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் முத்துவேலன், ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல், தி.மலை மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago