திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 3 உழவர் சந்தைகளை புனரமைக்க அரசிடம் கூடுதலாக ரூ.257.75 லட்சம் நிதி கோரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரி வித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு களில் 2 கட்டமாக மாநிலம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளையும் புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உழவர் சந்தைகள் புனரமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 3 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.257.75 லட்சம் கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் களிடம், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி ஆகிய 3 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இதில், வாணியம்பாடி உழவர் சந்தை மாநில அளவில் 2-வது இடத்தில் உள்ளது.
இங்கு, 2,400 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 மெட்ரிக் டன் வரை காய்கறி, கீரை வகைகள், பழங்கள் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட கோடியூர், கலந்தரா, சின்ன கல்லுப்பள்ளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் காய்கறிகள் விற் பனைக்காக கொண்டு வரப்படு கின்றன.
திருப்பத்தூர் உழவர் சந்தையில் 300 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு, நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனையாகின்றன. இங்கு, 15-க்கும் மேற்பட்ட கிராமங் களில் இருந்து காய்கறிகள் விற்பனைக் காக கொண்டு வரப்படுகின்றன.
நாட்றாம்பள்ளி உழவர் சந்தையில் 100 விவசாயிகள் உறுப் பினர்களாக உள்ளனர். இங்கு, நாள் ஒன்றுக்கு 5 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் விற்பனையாகின்றன. நாட்றாம்பள்ளி, பச்சூர், வெலக்கல்நத்தம், மல்லகுண்டா, சொரக்காயல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படு கிறது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விளைப் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதால் உள்ளூர் சில்லறை அங்காடி விலையை காட்டிலும் 15 சதவீதம் விலை குறைவாக கிடைக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 உழவர் சந்தைகளிலும் விளைப்பொருட்களை இருப்பு வைக்க குளிர்பதனக்கிடங்கு வசதி உள்ளது. விவசாயிகளுக்கு இலவச கடைகள், மின்னணு எடைத்தராசு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இந்நிலையில், 3 உழவர் சந்தைகளிலும் மேலும் சில வசதிகளை ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செலவீன தொகை கணக்கீடு செய்யப்பட்டு உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.257.75 லட்சம் கூடுதல் நிதி கேட்டு தமிழக அரசுக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கருத்துரு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உழவர் சந்தைகளில் உறுப்பினராக இணையவும், அதற்கான விளக்கம் பெற வேளாண் துணை இயக்குநர் செல்வராஜ் 99526-25200 அல்லது நிர்வாக அலுவலர் முருகதாஸ் 98407-06334 ஆகியோரின் அலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago