தமிழக நிதிநிலை அறிக்கையில் கடனை கட்ட வழிவகை இல்லை : பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கருத்து

By செய்திப்பிரிவு

நாமக்கல் நகர பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் நாமக்கல்லில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவரான முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் மீதான கடனை அடைக்க திமுக தலைமையிலான அரசு கடமைப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் வழங்கிய 520 வாக்குறுதிகளில் ஒன்று, இரண்டை நிறைவேற்ற முயற்சி செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மூலம் 97 சதவீதம் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. குஜராத் போல கடனில்லா மாநிலமாக மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.

100 நாளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது. நிதிநிலை அறிக்கையில் கடனை கட்ட எந்த வழிவகையும் சொல்லவில்லை. மத்திய அரசு விரைந்து கடனில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யும். மக்கள் ஆசி யாத்திரை சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்