திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி மைய அலு வலக வளாகத்தில் நேற்று நடை பெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் மு.ப.நெ.முஜிபுர் ரகு மான், தேசியக் கொடியேற்றினார்.
தொடர்ந்து, மாநகரில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணி யாற்றிய 16 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய 12 பேருக்கு தலா ரூ.2,000 ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆணையர் வழங்கினார். இதில், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, நகர் நல அலுவலர் எம்.யாழினி, செயற் பொறியாளர்கள் பி.சிவபாதம், ஜி.குமரேசன், உதவி ஆணையர்கள் ச.நா.சண்முகம், எம்.தயாநிதி, செ.பிரபாகரன், எஸ்.திருஞானம், சு.ப.கமலக்கண்ணன், எஸ்.செல்வபாலாஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நீதிமன்ற வளாகத்தில்..
திருச்சி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி கிளாஸ்டன் பிளசட் தாகூர், துப்பாக்கி தொழிற்சாலையில் பொதுமேலாளர் சஞ்சய் திரிவேதி, தமிழ்நாடு ஓட்டலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் சபேசன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
கல்வி நிலையங்களில்...
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தின் பல்கலைப் பேரூர் வளாகத்தில் துணைவேந்தர் ம.செல்வம் தேசி யக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் எம்.செல்வம், பாபு ராஜேந்திரன், ஆர்.மங்க ளேஸ்வரன், தேர்வாணையர் ச.சீனிவாசராகவன், என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.லட்சுமிபிரபா, உடற்கல்வித் துறைத் தலைவர் ஆர்.காளிதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல்கலைக்கழகப் பதிவாளர் க.கோபிநாத் தேசியக் கொடியை ஏற்றினார்.
தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) திருச்சி வளாகத்தில் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தேசியக் கொடியை ஏற்றினார். இதில், பாதுகாப்பு அதிகாரி ஜி.முருகன், என்சிசி அலுவலர் ஆர்.மோகன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய மேலாண்மைக் கழக திருச்சி (ஐஐஎம்) வளாகத்தில் இயக்குநர் பவன்குமார் சிங் தேசியக் கொடியேற்றிவைத்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்று களை நட்டுவைத்தார்.
ஹஜ்ரத் நத்தர்வலி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கி.ஆ.பெ.அரசு மருத்துவக் கல்லூரி முன் னாள் துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ.அலீம் தேசியக் கொடி ஏற்றினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில்...
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலை மற்றும் தியாகி டிஎஸ்.அருணாச்சலம் ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி வேலுச்சாமி, கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், கலை, மாவட்டப் பொருளாளர் ராஜா நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புங்கனூர் காமராஜர்- மூப்பனார் மன்றத்தில் புங்கனூர் செல்வம் தேசியக் கொடியேற்றிவைத்தார். செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் டி.தியாகராஜன் தேசியக் கொடியேற்றினார்.
தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திருச்சி உப்பு சத்தியாகிரக நினைவுத்தூணில் அமைப்பின் மாநிலத் தலைவர் இ.எம்.ஆறுமுகம் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago