விழுப்புரம் அருகே பிடாகம் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி (58). விவசாயியான இவர், தனது வயலில் மணிலா சாகுபடி செய்துள்ளார். அறுவடை நேரமான தற்போது இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் மணிலா பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அதைத் தவிர்க்க இரவு நேரத்தில் வயலுக்குச் சென்று காவல் காத்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு வயலுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த கோதண்டபாணி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago