41 மாத பணி நீக்க காலத்தை கைவிட வேண்டும் : சாலை பராமரிப்பு ஊழியர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பணி நீக்கம் செய்யப்பட் 41 மாத பணி நீக்க காலத்தை கைவிட்டு பணப் பலன்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என சாலை பராமரிப்பு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஹபிப்பத்துல்லா, பரமேஸ்வரன், வனராஜ், ரவி, குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தொடக்கவுரையாற் றினார். முன்னதாக மாவட்டச் செயலர் ஜெயசீலன் வரவேற்றார். மாநில பொதுச் செயலர் விஜயகுமார் வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில், 1.7.2021 முதல் மத்திய அரசு அறிவித்துள்ளபடி அகவிலைப்படி 11 சதவீதத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தர ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்கள் பணி நீக்க காலமான 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்வூதியத்துக்கும், ஓய்வூதிய பலன்களுக்கும்பணிக் கொடைக்கும் பொருந்தக் கூடிய வகையில் அரசாணையை வெளியிட வேண்டும். விதி களைத் தளர்த்தி வாரிசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்