நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 18-ம் தேதி நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என அதன் ஒருங்கிணைப்பாளர் என.அகிலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நபார்டு வங்கியின் வேளாண் அபிவிருத்தி நிதி திட்டத்தின் கீழ் வரும் 18-ம் தேதி நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்கள், பண்ணை பாதுகாப்பு முறைகள் மற்றும் இறந்த கோழிகளை மக்கும் உரமாக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இதன்படி நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்கள், கோழிகளுக்கு அளிக்கவேண்டிய தடுப்பூசி அட்டவணை, கோழிகளை நோய் தாக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பண்ணை உயிர் பாதுகாப்பு முறைகள், இறந்த கோழிகளை அப்புறப்படுத்தம் வழிமுறைகள், மேலும் இறந்த கோழிகளை மக்கும் உரமாக்குதல் குறித்து செயல் விளக்கங்களுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கு பெற ஆர்வமுள்ளோர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266650 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பெயர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயற்சிக்கு நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago