நெல்லை மாவட்டத்தில் - 15 ஆயிரம் ஹெக்டேரில் கார் பருவ நெல் சாகுபடி : வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்தி ரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத் தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, முக்கூடல் ஆகிய வட்டாரங்களில் 15 ஆயிரம் ஹெக்டேரில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெற்பயிரில் பரவலாக பொட்டாஷ் சத்து குறைபாடு ஆங்காங்கே காணப்படுகிறது.

பொட்டாசியம் பற்றாக்குறை யுள்ள பயிர்கள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படும். இளம் இலைகளில் நீண்ட பழுப்பு நிறபுள்ளிகள் இலையின் நடுவிலிருந்து நுனிவரை காணப்படும். முதிர்ந்த இலைகளில இப்புள்ளிகள் அதிகமாக காணப்படும். இது காண்பதற்கு துங்ரோ வைரஸ் அறிகுறிகளைப்போல் தென்படும். இதனால் பயிரில் கதிர் பிடிக்கும் திறன் குறையும். மணிகளின் திரட்சி குறைந்துவிடும். தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களை அதிகமாக பயன்படுத்துவதால் பொட்டாஷ் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்த சத்து குறைபாட்டை போக்க சரியான அளவு பொட்டாஷ் உரத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் பண்ணை கழிவுகள், சாம்பல் மற்றும் ஊட்டமேற்றிய தொழுஉரம் ஆகியவற்றை பயன்படுத்தி சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம். மேலும் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு உரத்தை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும். இளம் பயிர்களில் அதாவது நடவு செய்த 30-35 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு ஏக்கருக்கு 12.5 பொட்டாஷ் மேலுரமிடல் வேண்டும். பின்னர் 15 நாட்கள் கழித்து பூக்கும் தருணத்தில் மீண்டும் ஒருமுறை 12.5 கிலோ பொட்டாஷ் உரமிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சத்து குறைபாட்டை போக்க சரியான அளவு பொட்டாஷ் உரத்தை பயன்படுத்த வேண்டும். பண்ணை கழிவுகள், சாம்பல் மற்றும் ஊட்டமேற் றிய தொழுஉரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்