வெண்குன்றம் தவளகிரி மலையில் சேதப்படுத்தப்பட்ட - விநாயகர் கோயில் கோபுரம் சீரமைக்கப்படும் : இணை ஆணையர் கஜேந்திரன் உறுதி

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் தவளகிரி மலையில் சேதப்படுத்தப் பட்ட விநாயகர் கோயில் கோபுரம் விரைவாக சீரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன் தெரிவித்தார்.

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,400 அடி உயர தவளகிரி மலை மீது தவளகிரீஸ்வரர் கோயில், விநாயகர் கோயில் உள்ளன. இதில், விநாயகர் கோயில் கோபுரத்தை மர்ம நபர்கள் இடித்து சேதப்படுத்தியிருந்தது நேற்று முன் தினம் தெரியவந்தது.

இதையடுத்து, கோயில் கோபுரத்தை சேதப்படுத்தி யவர்களை கைது செய்யக் கோரி இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து வந்தவாசி தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தவளகிரி மலையில் சேதப்படுத்தப்பட்ட விநாயகர் கோயிலை திருவண் ணாமலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவரிடம் கோயிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்து அமைப்பினர் மற்றும் பொது மக்கள் முறையிட்டனர்.

பின்னர், இணை ஆணையர் கஜேந்திரன் கூறும்போது, “சேதப்படுத்தப்பட்ட கோயில் கோபுரத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலுக்கு பாதுகாப்பை அதிகப் படுத்தும் வகையில் தேவைப்படும் இடங்களில் இரும்பு கதவுகள் அமைக்கப்படும்” என்றார்.

பின்னர் அவர், வந்தவாசியில் நடைபெற்று வரும் ஜலகண்டேஸ்வரர் கோயில், ரங்கநாதப் பெருமாள் கோயில் ஆகியவற்றுக்கான 2 மரத்தேர்கள் செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது அவர், தேர் செய்யும் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

வந்தவாசியில் நடைபெற்று வரும் ஜலகண்டேஸ்வரர் கோயில், ரங்கநாதப் பெருமாள் கோயில் ஆகியவற்றுக்கான 2 மரத்தேர்கள் செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்