பிஏபி பிரதான கால்வாயில் சேதம் :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அருகே பிஏபி பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. திருமூர்த்தி அணையிலிருந்து கடந்த 3-ம் தேதி நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பிஏபி பிரதான கால்வாயில் 935 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அணையில் இருந்து 20.800 கிமீ தொலைவில் உள்ள கெடிமேடு என்ற இடத்தில் பிரதான கால்வாயில் பெரிய ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதை கண்ட விவசாயிகள், உடனடியாக பொதுப்பணித் துறை அதிகாரி களுக்கு தெரிவித்தனர். இதைய டுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

உடைப்பு ஏற்பட்ட இடத்தை பொள்ளாச்சி கோட்ட செயற்பொறி யாளர் பழனிவேல், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் ராஜன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். கரையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘‘பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் நீரின் அழுத்தம் காரணமாக கீழ்நீர் போக்கியில் அழுத்தம் ஏற்பட்டதால் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கரையில் சிமெண்ட் பூச்சு பணிகள் முடிக்கப்பட்டு இன்று (14-ம் தேதி) முதல் தண்ணீர் திறக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்