மேட்டுப்பாளையத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அம்மனுவில்,‘‘திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு தினமும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். இதே போன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தினமும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு மின்சார ‘மெமோ’ ரயில் இயக்க வேண்டும். கடந்த ஆண்டு கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட பொள்ளாச்சி - கோவை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago