கோவை அருகே, டாஸ்மாக் ஊழியரிடம் அரிவாளைக் காட்டி பணம் பறித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவைச் சேர்ந்தவர் முத்து(27). இவர் கோவை சிறுமுகையில் உள்ள வெள்ளிக்குப்பம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் அரிவாளை காட்டி முத்துவிடம் இருந்த ரூ.2 ஆயிரம் தொகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில், சிறுமுகை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பணத்தை பறித்துச் சென்றவர்கள் சிறுமுகை மகாலட்சுமி வீதியைச் சேர்ந்த வீராசாமி(23), அண்ணா நகரைச் சேர்ந்த செல்வக்குமார்(31) , மேட்டுப்பாளையம் அறிவொளி நகரைச் சேர்ந்த அபுசேட்(23), சேரன் நகரைச் சேர்ந்த அன்சார்(21), ஆலாங்கொம்பைச் சேர்ந்த கார்த்திக்(23) எனத் தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago