ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற கேரள இளைஞரை போலீஸார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து, கைது செய்தனர்.
ஆனைமலை அடுத்த காளியாபுரம் சிவன்கோயில் வீதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள் (55). இவர், வேட்டைக்காரன் புதூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த இளைஞர், சுந்தராம்பாள் கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார்.
தகவலின்பேரில் ஆனைமலை காவல் உதவி ஆய்வாளர் முருகவேல் தலைமையிலான போலீஸார், ஆனைமலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறிய அடையாளத்துடன், இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்த முயன்றபோது, தப்பிச்சென்றுள்ளார்.
போலீஸார் துரத்திச் சென்று அம்பராம்பாளையம் அருகே மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 5 பவுன் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சியாஸ்தீன் ( 27 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago