கனரா வங்கியின் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலமாக பயிற்சி பெற்ற 25 பெண் தொழில் முனைவோருக்கு நேற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கனரா வங்கியின் சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி இம்மையத்தில் ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு விதமான சுய தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரித்தல் பயிற்சி பெற்ற 25 மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநரும் துணை ஆட்சியருகமான ரமேஷ்குமார் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் பயிற்சி மைய வளாகத்தில் நடவு செய்யப்பட்டன. பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago