சுதந்திர தின விழா நாளை கொண்டாட்டம் - கோவையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவலர்கள் : கரோனா அச்சத்தால் இந்த ஆண்டும் கலை நிகழ்ச்சிகள் ரத்து

By செய்திப்பிரிவு

சுதந்திர தினவிழாவையொட்டி, கோவை மாநகரில் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரோனா அச்சத்தால், இந்த ஆண்டும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் பட்டுள் ளன.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா, நாளை கொண்டாடப்படு கிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி மைதானத்தில் எளிமையான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விழாவுக்கு தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி.மாணவர்கள் ஆகியோரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

கரோனா அச்சத்தின் காரணமாக, கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களுக்கும் அனுமதியில்லை.

விழாவுக்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில்நடந்து வருகின்றன. வ.உ.சி மைதானத்தில் நேற்று காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மாநகரில் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோரின் தலைமையில், 4 துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்என 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் பகுதிகளில் ஏறத்தாழஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள னர். விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டு,மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் ஒவ்வொரு பிளாட்பாரமாக சோதனை செய்து வருகின்றனர். பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல, கோவை விமானநிலைய வளாகத்தின் உட்பகுதியில், மத்திய தொழில் பாதுகாப்புப்படை யினரும், வெளிப்புறம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மாநகர காவல்துறையினரும் கண்காணிப் புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனைக்கு பிறகே பயணிகள் விமான நிலையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

பார்வையாளர்களின் அனுமதி யும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்