ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை - கோயில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களை அனுமதிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு கடந்த வாரம் சனிக்கிழமை முதலே நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது வாரமாக கோயில்கள், தேவாலயங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. வீடுகளிலேயே வழிபாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று கோவை கோனியம்மன் கோயில், தண்டு மாரியம்மன் கோயில், ஆனைமலை மாசாணி யம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கெம்பட்டி காலனி முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், டி.கே.மார்க்கெட் மாகாளியம்மன் கோயிலில் காய்கறிகளால் அம்மனுக்கு தேசியக் கொடி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

கோனியம்மன் கோயில், தண்டுமாரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியமான இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனாலும், உள்ளூர் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்களில் பக்தர்கள் வழக்கம் போல வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்