காசிமேடு துறைமுகத்தை : மேம்படுத்த : ரூ.150 கோடி நிதி :

By செய்திப்பிரிவு

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்றுபட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழகபட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்புடன், கடல் மீன் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு நாட்டின் 2-வது பெரிய மாநிலமாக உள்ளது. மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதிக்காகவும், சிறப்பு நிதிக்காகவும், கடல்சார் மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்துக்காகவும் மொத்தம் ரூ.303.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகன்குப்பம் மற்றும் ஆற்காட்டுத் துறையில் மீன்பிடித் துறைமுக திட்டப் பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும். புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்களை அமைக்க ரூ.433.97கோடியும், மீன்இறங்கு தளங்களை மேம்படுத்த ரூ.143.46 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1,149.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்