சென்னை மாநகராட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி விலையில்லாமல் போடப்பட்டு வருகிறது. இதற்காக, மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி மையங்கள் மற்றும் தடுப்பூசிசிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் முதற்கட்டமாக 140 குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனாதடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாளொன்றுக்கு ஒரு மண்டலத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளில் 3 தடுப்பூசிசிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (நேற்று) முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago