பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு? : பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க கோரிக்கை

பணிநிரந்தம் செய்ய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள னர்.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது:

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக திமுக சார்பில் உறுதிய ளிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரி லேயே முதல்வர் எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு பலவழிகளில் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் இன்னும் தொகுப்பூதியத்திலே தான் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழலில் பலருக்கு 40 முதல் 55 வயது ஆகிவிட்டது. அவர்கள் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமானது மிகுந்த பாதிப்பில் இருக்கிறது. எங்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி, நிரந்த ரம் செய்ய வேண்டும்.ஆட்சிக்கு வந்த 100 நாளில் பகுதிநேர ஆசி ரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்பதை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து உள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்