புதுச்சேரியில் ஆக. 15-க்குப் பிறகு பள்ளி திறப்பு குறித்து ஆலோசனை : அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி அரசு கல்வித்துறை வளாகத்தில், நிகழாண்டு சென்டாக் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் விநியோகத்தை நேற்று மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் நிக ழாண்டு (2021-22) இளநிலை தொழில் படிப்புகள், கலை, அறிவியல், வணிகம், நுண்கலை படிப்பு களுக்கான சேர்க்கைக்கு இன்று (ஆக. 13) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்விக்கான சேர்க்கை, நீட் தேர்வு நடத்திய பின்னர் அறிவிக் கப்படும்.

கடந்த காலங்களில் சென்டாக் மூலம் விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த முறை கரோனா காரணமாக கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது. சென்டாக் மூலம் மொத்தம் 8,167 சேர்க்கை இடங்கள் அரசின் மூலம் நிரப்புவதால் மாணவர்கள் சேர்ந்து பயன்பெற முடியும். இதற்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளா கும்.

இந்த முறை பிளஸ் 2 வகுப் பில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதால், அனைத்து மாணவர்க ளுக்கும் உரிய உயர்கல்வி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். கூடுதல் சேர்க்கை இடங்கள் தேவை ஏற்படின், கல்லூரிகளில் ஷிப்ட் முறை வகுப் புகள் போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆகஸ்ட் 15-ம்தேதிக்குப் பிறகு, துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப் படும்.

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிமுறைகளை வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் புதியகல்விக்கொள்கை அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கை அமல் படுத்துவது தொடர்பாக அரசு சார்பில் ஆராய்ந்து விரைவில் அறிவிக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கும் சட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

அதனால் அரசுக்கு கூடுதல் செலவினம். அதற்கு நிதித்துறையின் அனுமதி போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் முதல்வரிடம் பேசி அதனையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரி வித்தார்.

இந்த முறை பிளஸ் 2 வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதால், அனைத்து மாணவர்களுக்கும் உரிய உயர்கல்வி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்