வேடசந்தூர் அருகே வேனில் கடத்தப்பட்ட - ரூ.15 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

வேடசந்தூர் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சிவக் குமார் (39). சரக்கு வாகன ஓட்டுநர். இவர், பெங்களூருவில் பர்னிச்சர்களை வேனில் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சென்றார். சேலம் வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் ஹாலிக் (36), ரபீக் (43) ஆகியோர் திண்டுக்கல்லில் சில சரக்கு மூட்டைகளை இறக்க வேண்டும் என்று கூறி, வேனில் ஏற்றினர். பின்னர் வேனுக்கு முன்னால் இருவரும் காரில் சென்றனர். வேடசந்தூர் அருகே விட்டல் நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நேற்று அதிகாலை வேன் நின்றது. அவ்வழியாக ரோந்து சென்ற எஸ்.பி. தனிப்படை எஸ்.ஐ.கள் ஷேக் தாவூத், மாரிமுத்து ஆகியோர் வேனில் சோதனையிட்டனர்.

அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டவை இருந்தன. ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் சிக்கந்தர் ஹாலிக், ரபீக் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

திண்டுக்கல்லில் சாதிக்அலி என்ப வருக்கு புகையிலைப் பொருட்களை கொண்டு வந்ததாக இருவரும் தெரி வித்தனர்.

இதையடுத்து ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆயிரம் கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும் வேனை பறி முதல் செய்தனர். கடத்தி வரப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்