திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளால் கோயில்கள் அடைக்கப்பட்டிருந்ததால், ஆடி கடைசி வெள்ளி வழிபாட்டை பக்தர்கள் கோயில் வாயில்களில் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த வாரம் போலவே இந்த வாரமும் வெள்ளிக்கிழமை கோயில்கள் அடைக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்குள் நடைபெற வேண்டிய வழக்கமான பூஜைகள் நடைபெற்றபோதும், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் பக்தர்கள் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் நுழைவுவாயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் அடிவாரம் பகுதியில் விளக்கு ஏற்றி ஆடி கடைசி வெள்ளி வழிபாட்டை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago