வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு :

By செய்திப்பிரிவு

சத்திரக்குடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே தீயனூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன்.

இவர் காரைக்குடியில் உள்ள அஞ்சலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி, தந்தை ஆகியோர் தீயனூர் காலனியில் வசித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை வீட்டில் சத்தியேந்திரனின் மனைவி சுப ரோஸ்(26) தூங்கிக் கொண் டிருந்தார். அப்போது மர்ம நபர் உள்ளே புகுந்து சுபரோஸின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துள்ளார்.

சுபரோஸ் தாலி செயினை பிடித்துக் கொண்டு போரா டினார். இதனால் மர்ம நபர் பாதி செயினை (2 பவுன்) பறித் துச் சென்றார்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்