ஒரே வீதியில் 11 பேருக்கு தொற்று பரவல் - ஈரோட்டில் 400 பேருக்கு கரோனா பரிசோதனை :

By செய்திப்பிரிவு

கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 400 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், ஒரே வீதியில் 4 வீடுகளில் வசித்த 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் வைத்து வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், 11 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 400 பேருக்கு, ஏழு மருத்துவக் குழுக்கள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மக்களுக்குத் தேவையான உதவிகள் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது, என்றார்.

250 பேருக்கு அபராதம்

இதனிடையே ஈரோடு மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த 250 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாலை 5 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்தால், அபராதம் விதிப்பதோடு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்