சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு - 94 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை :

By செய்திப்பிரிவு

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து 94 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 5.51 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தது. இவை அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரப் பிரிவு மூலம் பிரித்து அனுப்பப்பட்டது.

இதன்படி, சேலம், ஆத்தூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து சுகாதார மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து 94 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. சேலத்துக்கு 26 ஆயிரம் டோஸ், ஆத்தூருக்கு 8,500 டோஸ், தருமபுரிக்கு 17 ஆயிரம் டோஸ், கிருஷ்ணகிரிக்கு 22 ஆயிரம் டோஸ், நாமக்கல்லுக்கு 20,500 டோஸ் என 94 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று சேலம் வந்தடைந்தது. ஐந்து சுகாதார மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகளை பிரித்து அனுப்பும் பணியில் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களுக்கு தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு, இன்று(14-ம் தேதி) முதல் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்