மேலப்பாளையத்தில் பழைய டயர்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் பெரும் தீவிபத்து நிகழ்ந்தது. தீயணைப்பு படையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கருப்பந்துறையை சேர்ந்த பழைய டயர்களை வாங்கி விற்பனை செய்யும் ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான கிட்டங்கி, மேலப்பாளையம் ராஜாத்திகாலனி ராஜா கோயில் அருகே உள்ளது. இந்த கிட்டங்கியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தீப்பிடித்து டயர்கள் மளமளவென எரிந்தது. இதனால் புகைமூட்டம் வெளிக்கிளம்பியது.
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமை யில் தீயணைப்பு படையினர் 3 வண்டிகளில் அங்கு சென்று தீயை அணைக்க போராடினர். 5 மணிநேர போராட்டத்துக்குப்பின் தீ அணைக்கப்பட்டது. கிட்டங்கியிலிருந்த பழைய டயர்களும், வெளியே நிறுத்தி வைத்திருந்த 2 மினி சரக்கு வாகனங்களும் எரிந்து நாசமாயின. சேதமதிப்பு ரூ.7 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலப் பாளையம் போலீஸார் விசாரிக் கிறார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago