வேலூர் பெண்கள் தனி சிறை வார்டர் பணியிடை நீக்கம் :

By செய்திப்பிரிவு

வேலூர் பெண்கள் தனி சிறையில் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பெண் சிறை வார்டர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 90-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஞானசவுந்தரி என்பவர் வார்டராக பணியாற்றி வருகிறார்.

இவர், பணியில் கவனக் குறைவாக செயல்பட்டதுடன் பணிக்கும் சரியாக வருவ தில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி ஆய்வில் இருந்தபோது ஞானசவுந்தரி குறித்து சில பெண் வார்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணைக்கு வருமாறு ஞானசவுந்தரியை அழைத்துள்ளனர். அதற்கு வர மறுத்த ஞானசவுந்தரி விசாரணைக்கு வருமாறு அழைத்த பெண் வார்டரையும் தாக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து, பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட புகாரின்அடிப்படையில் ஞானசவுந்தரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி நேற்று முன்தினம் உத்தர விட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்