பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி நடைபெற இருந்த - உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு : தி.மலை ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி சுதந்திர தினத்தன்று நடைபெற இருந்த கருப்புக் கொடி உண்ணாவிரதப் போராட் டம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுதந்திர தினத்தன்று (15-ம் தேதி) கருப்பு கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தலித் விடுதலை இயக்கம் அறிவித்தது.

இதையடுத்து, ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. தலித் விடுதலை இயக்கத் தலைவர் கருப்பையா, மாநில மகளிர் அணி செயலாளர் நதியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ராம தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அம்பேத்வளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, “திருவண்ணா மலை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த பட்டியலை (சர்வே எண்களுடன்) ஆட்சியரிடம் நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் அவர்கள், பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் மற்றும் வீடு இல்லாத வர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க வலியுறுத்தினர்.

பின்னர் ஆட்சியர் பேசும்போது, பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித் துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கருப்புக் கொடி உண்ணாவிரதப் போராட் டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நிர்வாகிகள் அறிவித்தனர்.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டிருந்த தலித் விடுதலை இயக்கத்தினர் உட்பட 300 பேரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE